• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பியூட்டி இன்டஸ்ட்ரி தொழில் முனைவோர் சங்கத்தின் ஆண்டு விழா..,

ByPrabhu Sekar

Mar 26, 2026

தமிழ்நாடு பியூட்டி இன்டஸ்ட்ரி தொழில் முனைவோர் சங்கத்தின் 1ஆம் ஆண்டு விழா சிறப்பாக மிக சிறப்பாக நடைபெற்றது.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மார்லேன் மஹாலில் தமிழ்நாடு பியூட்டி இன்டஸ்ட்ரி தொழில் முனைவோர் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் இலங்கேஸ்வரி, துணைத் தலைவர்கள் எம்.சினிமோல், சி.பிரபாவதி, செயலாளர் தேவி கார்த்திக், பொருளாளர் கோமதி உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் இந்த விழா நடைபெற்றது

இதில் சிறப்பு அழைப்பாளராக நேச்சுரல்ஸ் இணை நிறுவனர் சி‌கே.குமரவேல், பழம் பெரும் அழகு வணிக ஆளுமை பிரேமா நரசிம்ஹன், அகில இந்திய ஹேர் அண்ட் பியூட்டி சங்கத்தின் சார்பாக தேசிய பொதுச் செயலாளர்
ஆண்டனி டேவிட், தென்னிந்தியாவின் நிறுவனர் அனு ரமேஷ், தமிழ்நாடு நிறுவனர்
சீனா மினி, சின்னத்திரை நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நவீன்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இவ்விழாவில் சிறப்புரையாற்றி அதனைத் தொடர்ந்து பியூட்டி துறையில் சிறந்து விளங்கும் தொழில் முனைவோருக்கு பாராட்டு மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. பெண்கள் தொழில் முனைவோரின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மேலும், இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த தொழில் முனைவோர் மற்றும் நிபுணர்கள் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு விழா தொழில் வளர்ச்சி, புதிய வாய்ப்புகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய மேடையாக அமைந்தது.

மொத்தத்தில், தமிழ்நாடு பியூட்டி இன்டஸ்ட்ரி தொழில் முனைவோர் சங்கத்தின் முதல் ஆண்டு விழா வெற்றிகரமாக நடைபெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.