• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் கமிட்டி சார்பாக காளியம்மன் திருக்கோவிலில் வழிபாடு…

ByK Kaliraj

Mar 26, 2026

சாத்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோவிலில் அன்னை சோனியா காந்தி அவர்கள் உடல்நலம் பூரண குணம் பெற வேண்டி சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக பிரார்த்தனை செய்து 101 தேங்காய்கள் கோவில் முன்பு உடைத்து வழிபாடு செய்தனர்.

சாத்தூர் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் தலைமையில் சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன், சாத்தூர் கிழக்கு வட்டாரத் தலைவர் சுப்பையா மேற்கு வட்டாரத் தலைவர் சன் மாரிமுத்து கும்கி கார்த்திக் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் துணைத் தலைவர் ஆறுமுகம் சின்னப்பன் சேதுராமலிங்கம் வெள்ளைச்சாமி லட்சுமணன் மகேந்திரன் சங்கர் பாண்டி கருத்துததுறை சிவாஜி கார்த்தி மற்றும் ஏராளமான காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.