• Mon. Mar 23rd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

திமுக சார்பில் களப்பணி குறித்து ஆலோசனை கூட்டம்..,

ByK Kaliraj

Mar 22, 2026

வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக சார்பில் களப்பணி ஆற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நகரத்தில் உள்ள வார்டு எண் 21,30,33 ஆகிய வார்டுகளில் நடைபெற்றது

ஆலோசனை கூட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரின் மகனுமான தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி கே. கே. எஸ். எஸ். ஆர் .ஆர். ரமேஷ். தலைமை வகித்தார்.

முன்னாள் சேர்மன் சுப்புராஜ் முன்னிலை வகித்தார். அருப்புக்கோட்டை நகர ஒன்றிய கிளை கழக நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகளை குறித்து ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில் சென்ற சட்டமன்றத் தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற வேண்டும். திமுக அரசு செய்த மாபெரும் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..