• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஆந்திரா சென்று பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பு

Byகாயத்ரி

Dec 22, 2021

கென்யாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து திருப்பதிக்கு காரில் சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது.அதன்படி, வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் தமிழகம் வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கென்யாவில் இருந்து சென்னை வழியாக ஆந்திரா சென்ற 38 வயதான பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் திருப்பதிக்குச் சென்ற அந்தப் பெண்ணுக்கு ஒமைக்ரான் உறுதியானதை அடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் 6 பேருக்கு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது.