விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.54 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

இராஜபாளையம் அருகே சேத்தூர் இருந்து முகவூர் செல்லும் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பூபதி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சேத்தூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மதார்பீம் என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அவரிடம் ரூ. 54 ஆயிரம் பணம் இருந்தது. ஆனால் இந்த பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அமர்நாத் மற்றும் வட்டாச்சியர் ராஜீவ் காந்தியிடம் ஒப்படைத்தனர்.



