• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஊழியபத்து கோயில் விவகாரம்..,

ByM.I.MOHAMMED FAROOK

Mar 16, 2026
காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட ஊழியபத்து ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய ஆண்டு திருவிழாவில் கடந்தாண்டு மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் பகுதி வழியாக சாமி சென்று வர அனுமதிக்காத நிலையில் அப்போதிருந்த துணை மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் பொது வழியில் சாமி செல்ல எந்த தடையும் இல்லை எனவும் சாமியுடன் பத்து நபர்கள் மட்டும் சென்று வரலாம் என உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. 

  இந்த ஆண்டு திருவிழாவின் வீதியுலா நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்ட நபர்களை மீறி அதிகமானோர் சாமி உடன் வந்ததாகவும் இதனால் இரு தரப்பினரையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இன்று காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியரை சந்தித்து ஊழியபத்து மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சம்பவம் குறித்து எடுத்துரைத்தனர் இதில் உரிய முடிவு எட்டபடாத நிலையில் சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை எனவும் இதனை கண்டிக்கும் வகையில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை காரைக்கால் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்க உள்ளதாகவும் அக்கட்சியின் மாநில அரசியல் குழு செயலாளர் அரசு வணங்காமுடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யும் முறை எங்களது போராட்டம் ஓயாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.