• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு பாமக வினர் போராட்டம்..,

ByP.Thangapandi

Mar 16, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர் சுப்பையன் அரசு அங்கீகாரம் இல்லாத பத்திரங்களுக்கு லஞ்சம் வாங்கி பத்திர பதிவு செய்து வருவதாகவும், நத்தம் வீட்டுமனை பதிவுகளுக்கு, 10 ஆயிரம் ரூபாயும் உதவியாளர் ரகுபதி 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கி பத்திர பதிவு செய்வது மட்டுமல்லாது பத்திரபதி அலுவலகத்தை லஞ்சம் அலுவலகமாக மாற்றி விட்டார்கள் எனவும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பத்திரப்பதிவு உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் திடீரென செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை பாமக தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் பாமகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த வாலாந்தூர் போலீசார் தேர்தல் விதி நடைமுறையில் உள்ளதால் அனுமதி இல்லை எனவும், உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.