• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சக்கிமங்கலத்தில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து..,

ByKalamegam Viswanathan

Mar 15, 2026

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்கிமங்கலம் ஊராட்சியில் மதுரை சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோன் இயங்கி வருகிறது.

குடோன் உரிமையாளர் சக்தி வெளியூர் சென்றிருந்த நிலையில் அருகில் வயல்வெளியில் எரிந்து கொண்டிருந்த தீ ஆனது காற்றுக்கு மளமளவென பரவி குடோனில் பற்றியது.

கொஞ்சம் கொஞ்சமாக பற்றி எரிந்த தீ குடோன் முழுவதுமாக எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியை புகை மண்டலமாக சூழ்ந்தது. இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் உத்தரவின்படிசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வெங்கடேசன், அசோக்குமார் மற்றும் SSO கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நான்கிற்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளை வரவைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குடவுன் முழுவதும் எரிந்து தீக்கிரையாகி விட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. எரிந்த பொருட்களின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் என குடோன் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் முகமது இஸ்ரத் சார்பு ஆய்வாளர்கள் மணிமாறன் தமிமுன்அன்சாரி கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் பாபு வருவாய் ஆய்வாளர் வீரசெழியன் சத்தியமங்கலம் ஊராட்சி செயலாளர் திருமூர்த்தி தலையாரி துரைராஜ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து சுலைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.