• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

முதல்வர் பிறந்தநாள் மற்றும் விவசாயிகளுக்கு மண்வெட்டி வழங்கும் விழா..,

Byசோலைஆதி

Mar 11, 2026

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா விவசாயிகளுக்கு மண்வெட்டி வழங்கும் விழா மற்றும் மாணவ மாணவிகளுக்கு எழுது பொருள் வழங்கு விழா தெற்கு மாவட்ட விவசாய அணி சார்பாக நடந்தது.

இவ்விழாவிற்கு திமுக தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பிடி மோகன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச்செயலாளர் சிவபாண்டி, கிளைச் செயலாளர் மூக்கன், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில விவசாய அணி இணைச்செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ மாண முத்துராமலிங்கம் விவசாயிகளுக்கு இலவசமாக மண்வெட்டி வழங்கினார்.

இவ்விழாவில் மகளிர் அணி சங்கீதாபிரபு, இளைஞர் அணி பிரபாகரன், சின்னப்பாண்டி, காட்டுராஜா, ஜெயபாண்டி, தங்கப்பாண்டி, ஜெயக்குமார், சந்திரன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அரவிந்தன் நன்றி கூறினார்.