• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் சாதனைப் பெண்ணுக்கு பாராட்டு..,

Byமுகமதி

Mar 8, 2026

புதுக்கோட்டையில் சாலைப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கம் செயல்பட்டு வருகிறது. சாலை பாதுகாப்புகள் குறித்தும் சாலைகள் எந்த ஒரு இடத்திலும் எந்த சிறு விபத்தும் ஏற்படக்கூடாது என்பதற்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தச் சங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அதேபோல் சாலை பாதுகாப்புக்காக மட்டுமல்லாது போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிக்கும் சிறந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்து அவர்களை பாராட்டுவதோடு அது குறித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த வாரம் புதுக்கோட்டையைச் சேர்ந்த சி.சரோஜா என்ற சமூக ஆர்வ எண்ணம் கொண்ட பெண் இரவு நேரத்தில் புதுக்கோட்டை பழைய மாவட்ட அரசு மருத்துவமனை அருகில் உள்ள வேகத்தடைகள் வெள்ளை வண்ணம் பூசாமல் இருந்ததோடு அவ்வாறு இருந்ததால் இரவு நேரத்தில் மட்டுமல்லாது பகல் நேரத்திலும் பலர் விபத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். இது குறித்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இரவு நேரத்தில் தனி ஒரு நபராக அந்த இடத்தில் உள்ள இரண்டு வேகத்தடைகளுக்கு வெள்ளை பெயிண்ட் அடித்திருக்கிறார். இந்த செயல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனதோடு அந்த பெண்ணை பாராட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் சாலை பாதுகாப்புக்காகவும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாகவும் சரோஜா செய்த செயலை பாராட்டிய புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பாக தலைவர் கண.மோகன் ராஜா தலைமையில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்ணினத்தையும் சரோஜாவையும் கவுரவப்படுத்தும் விதமாக அவருக்கு சால்வைகள் அணிவித்து நினைவு பரிசும் வழங்கி கௌரவம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா, செயலாளர் R.சங்கர், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் இப்ராஹிம் பாபு பொருளாளர் C.பிரசாத் துணைத் தலைவர் சேட் என்ற அப்துல் ரகுமான், K.ஓம்ராஜ் வருங்கால செயலாளர் மணிகண்டன், உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம் கண்ணன், மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.