• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

நம்ம ராஜபாளையம் பெயர் பலகை திறப்பு..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நம்ம ராஜபாளையம் பெயர் பலகை திறப்பு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் முதல்வர் பி‌.எஸ். குமாரசாமி ராஜா பேருந்து நிலையம் என்ற நுழைவுவாயில் இருந்தது. அது நாளடைவில் சிதிலமடைந்தது. இந்நிலையில் நகராட்சி பொதுநிதியில் இருந்து 22.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பராமரிப்பு பணி நடைபெற்று செயற்கை நீர் ஊற்றுடன் நம்ம ராஜபாளையம் என்ற பெயர் பலகையை ராஜபாளையம் நகராட்சி நகர்மன்ற தலைவர் ஏ.ஏ. எஸ் பவித்ரா ஷியாம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் நாகராஜன், துணைத் தலைவர் கல்பனா, மண்டல செயற்பொறியாளர் சனல் குமார், உதவி பொறியாளர் ராமச்சந்திரன், ஒப்பந்ததாரர் ஹர்ஷா ஜெகநாதன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் நம்ம ராஜபாளையம் பெயர் பலகையை திறந்து வைத்த நகர் மன்ற தலைவர் ஏ.ஏ.எஸ்.பவித்ராஷ்யாம்