• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் வீட்டிலிருந்தே வருமானம் 2.O..,

BySeenu

Mar 5, 2026

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து, பெண்களை வேளாண் தொழில்முனைவோராக ஊக்குவிக்கும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ எனும் கருத்தரங்கை வரும் மார்ச் 8-ம் தேதி அரசூரில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் நடத்த உள்ளது.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் கே.பி.ஆர் கல்லூரி பிரதிநிதிகளுடன் இணைந்து பங்கேற்ற “மண் காப்போம்” திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா, இந்த கருத்தரங்கு குறித்து விரிவாகப் பேசினார்.

ஈஷா மண் காப்போம் இயக்கம்

இதில் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில்:-

“உலகளவில் அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சத்குரு அவர்களால் “மண் காப்போம்” இயக்கம் தொடங்கப்பட்டது.

வளமான மண் என்றால் மண்ணில் குறைந்தபட்சம் 3% முதல் 6% வரை அங்கக கரிமம் இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் இது 0.5% க்கும் குறைவாகவே உள்ளது. இந்த நிலை நீடித்தால் விளைநிலங்கள் பாலைவனமாகும் அபாயம் உள்ளதால், மண் வள மேம்பாடு குறித்து உலகளாவிய அளவில் கொள்கை ரீதியான மாற்றங்கள் மற்றும் சட்டங்களை உருவாக்கும் நோக்கில் சத்குரு இவ்வியக்கத்தை தொடங்கினார்.

உணவு, மருத்துவம், இயற்கை விவசாயம் மற்றும் மதிப்புக்கூட்டல் ஆகிய துறைகளில் சாதனைப் படைத்த பெண் தொழில்முனைவோர்கள் ஒன்றிணைந்து வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டக் கூடிய வணிக யுக்திகள் குறித்து வழிகாட்டும் வகையில் இந்த கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 2,000 பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர்

மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் மதிப்புக்கூட்டல் பொருட்களை தயாரிப்பதில் சிறந்து விளங்கும் 6 சிறந்த பெண் தொழில் முனைவோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.

வேளாண் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், நவீன பேக்கேஜிங் இயந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகளின் விற்பனை மற்றும் கண்காட்சியும் நடைபெற உள்ளது.