• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடியேற்றம்..,

குமரி மாவட்டம் குளச்சல் அருகே மண்டைக்காடு பகுதியில் உள்ளது பிரசித்தி பெற்ற மண்டைக்காடு ஶ்ரீ பகவதியம்மன் கோவில்,பெண்களின் ‘சபரிமலை’ என அழைக்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி கொடை திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு திருவிழா இன்று(மார்ச்_1)ம் தேதி காலை 7.25 முதல் 8.57 இடையிலான சுப முகூர்த்தத்தில் கோவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தி திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி, மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜான்சி ராணி உட்பட தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து வந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.

பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் பக்தர்கள் பல்வேறு நேர்ச்சை வழிபாடுகள் நடத்த உள்ளனர்.இந்த திருவிழாவின் பத்தாவது நாளான இந்த மாதம் பத்தாம் தேதி நள்ளிரவு இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை நடைபெற உள்ளது.