உண்மை உறங்கும், ஆனால் ஒருபோதும் தோற்காது!” பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஆம் ஆத்மி கட்சியின் அசுர வளர்ச்சியைத் தடுக்கவும், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நாங்கள் முன்னெடுத்து வரும் மக்கள் நலத் திட்டங்களை முடக்கவும் திட்டமிட்டு இந்த பொய் வழக்கை உருவாக்கியது. எத்தனையோ சோதனைகள், விசாரணைகள் நடத்தியும் ஒரு ரூபாய் கூட ஊழல் பணம் கைப்பற்றப்படவில்லை என்பதே இந்த வழக்கின் உண்மை நிலை.
விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்க நினைக்கும் மத்திய அரசுக்கு, இந்த நீதிமன்றத் தீர்ப்பு ஒரு பலத்த அடியாகும். பொய் வழக்குகள் மூலம் ஒரு நேர்மையான தலைவரின் குரலை நிரந்தரமாக ஒடுக்கிவிட முடியாது என்பதை நீதித்துறை மீண்டும் நிரூபித்துள்ளது.
அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களின் விடுதலை, டெல்லி மக்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்திய மக்களும் எதிர்பார்த்த ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
இந்த விடுதலையானது வரவிருக்கும் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப் பெரிய உத்வேகத்தைத் தந்துள்ளது. ஊழலற்ற, நேர்மையான அரசியலை முன்னெடுக்கும் கேஜ்ரிவால் அவர்களின் கரத்தை வலுப்படுத்த, ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் முன்பை விட அதிக வீரியத்துடன் களப்பணியாற்றுவோம்.”

“உண்மை உறங்கும், ஆனால் ஒருபோதும் தோற்காது!” ஷெல்லி எம். ஆர்.
மாவட்ட தலைவர் ஆம் ஆத்மி கட்சி கன்னியாகுமரி மாவட்டம்.







