• Wed. Feb 25th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

கோவையில் அன்பு விழா குடும்பத்தின் கொண்டாட்டம்..,

BySeenu

Feb 25, 2026

குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் படைப்பாற்றலை வளர்க்க கோவையில் புதிய முயற்சியாக அன்பு விழா குடும்பத்தின் கொண்டாட்டம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது…

குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாவதைத் தடுக்கவும், ஆரோக்கியமான பழக்கங்களை ஊக்குவிக்கவும் பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

இதன் ஒரு பகுதியாக கோவையில் குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் டேலண்ட் ஸ்ப்ளாஷ் (Talent Splash) எனும் நிகழ்ச்சி காந்தி பார்க் அருகில் உள்ள குமாரசாமி லேக் பகுதியில் நடைபெற்றது..

Zeal & dreams events) ஜீல் அண்ட் டிரீம்ஸ் மற்றும்(thuderdome) தண்டர்டோம் ஆகியோர் இணைந்து நடத்திய இதில்,பள்ளி மாணவர்கள் துவங்கி இளைஞர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கு பெற்றனர்..

முழுவதும் பொழுது போக்கு நிகழ்ச்சியாகவும்,அதே சமயத்தில் டிஜிட்டல் பயன்பாடுகளால் குழந்தைகளுக்கு உள்ள ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இதில் நடனம், பாட்டு, பேச்சு மற்றும் ஓவியம் போன்ற பல்வேறு துறைகளில் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் திறமை வெளிப்படுத்தல் திருவிழா நடைபெற்றது..

இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் டி.ஜே.ஹசி,வனிதா ஆறுமுகம், கோவை வாசி மற்றும் கோவை புரொடக்‌ஷன் அஹமது ஆகியோர் கூறுகையில் , தற்போது குழந்தைகள் துவங்கி இளைஞர்கள் உட்பட பலரும் அதீத டிஜிட்டல் பயன்பாட்டால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாகவும்,எனவே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதால் செல்போன் போன்ற டிஜிட்டல் பயன் பாடுகளை தாண்டி உள்ள பொழுது போக்கு அம்சங்களை அனைவரும் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தனர்..

ஆரோக்கிய வாழ்வில் நமது பாரம்பரிய பழக்கங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியை நடத்துவதன் நோக்கம் என தெரிவித்தனர்…

இலவச அனுமதியாக நடைபெற்ற விழாவில், நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது திறமைகளை உற்சாகமாக இந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தது

மேலும் இறுதியாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது