• Mon. Jun 15th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் மாவட்டத்தில் யூரியா வழங்க விவசாயிகள் கோரிக்கை..,

ByS.Ariyanayagam

Feb 25, 2026

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு முறையாக யூரியா வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூகாவில் உள்ள தொடக்க வேளாண்மை சங்கத்தின் சார்பாக தமிழக அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரீயா ஒரு விவசாயிக்கு ஒருமுறை தான் தருவதாகவும் ஒரு மூடை வாங்கி விவசாயிகள் எதுவும் செய்ய முடியாது

தனியார் நிறுவனங்களில் யூரீயா உள்ளது ஆனால் விலை அதிகமாக விற்கும் சூழ்நிலை உருவாகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளுக்கு தேவையான யூரியாவை வழங்க வேண்டும். ஒரு விவசாயிக்கு ஒரு மூடை யூரியா வழங்கினால் விவசாயம் செய்ய முடியாது அவர்களுக்கு தேவையான யூரியா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.