• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

மயானத்தின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் ஒரு உடலுக்கு மேல் இன்னொரு உடலை புதைக்கும் அவலம்..,

BySeenu

Feb 23, 2026

கோவை மயானத்தின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் ஒரு உடலுக்கு மேல் இன்னொரு உடலை புதைக்கும் அவலம் ஏற்படுவதாகவும் எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த மக்கள் மனு அளித்துள்ளனர்..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொலவம்பாளையம் கிராமத்தில் அரிஜன மயானம் உள்ளது. சுமார் 84 செண்ட் அளவில் உள்ள அந்த மயானத்தை சொலவம்பாளையம், எம்ஜிஆர் நகர், அண்ணா நகர், சிக்கலாம்பாளையம், ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த இடமானது அரசு ஆவணங்களில் அரிஜன மயானம் மற்றும் வண்டிப்பாதை என பதிவாகி இருக்க கூடிய சூழலில் வண்டி பாதையில் தற்பொழுது தார் சாலை அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதனை அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வாகனங்களை நிறுத்துவது, குப்பைகளை கொட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால் ஒருவர் உயிரிழந்தால் உடலை புதைப்பதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும் மேலும் புதைப்பதற்கு இடம் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குப்பைகள் கொட்டப்பட்டு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் உடல்களை புதைப்பதற்கு கூட போதிய இடம் இல்லை என்றும் அதனால் ஒவ்வொரு உடல்களுக்கு மேல் மற்றொரு உடலை புதைக்கும் அவலம் ஏற்படுவதாகவும் எனவே அந்த மயான இடத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.