மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் ஸ்ரீ ஞான சித்தி விநாயகர் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றது.

விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா தொடர்ந்து நவகிரக ஹோமம் வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து முதலாம் காலம் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலயாக பூஜைகள் நடைபெற்றது. ராஜா பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாகசாலை வேள்வியினை நடத்தினர். அதனைத் தொடர்ந்துநேற்று காலை சரியாக 11 20 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது கருடன் வானத்தில் வட்டமிட்டது தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் சிதம்பரநாதர் ஞானபிரகாச தேசிய பராமரி சுவாமி மதுரை சாரதா சேவா ஆசிரமம் கமலானந்த தீர்த்த சாமி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியை தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி கோவில் முன்பு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

இரவு சிம்ம வாகனத்தில் உச்சி மா காளியம்மன் தென்கரை கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் தென்கரை ஊத்துக்குளி நாராயணபுரம் முள்ளிப்பள்ளம் சோழவந்தான் மேலக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கும்பாபிஷேக திருப்பணி குழு நிர்வாக குழு மற்றும் தென்கரை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர் காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டிருந்தனர்.






