• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

புதிய ரிவர் இ-ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு: சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!

BySeenu

Feb 21, 2026

கோவையில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, ராஜதுரை இ-மொபைலிங் நிறுவனம் சார்பில் ‘ரிவர்’ (River) மின்சார இருசக்கர வாகன விற்பனையகம் கோவை சத்தி சாலையில் நேற்று தொடங்கப்பட்டது.

இந்த புதிய கிளையை நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அஸ்வினி, சேர்மன் சுந்தரேசன் மற்றும் ரிவர் நிறுவனத்தின் டீலர் டெவலப்பர் ஹெட் ரஞ்சனா ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர்.

நிகழ்வில் பேசிய நிர்வாகிகள், “ஸ்டைல் மற்றும் செயல்திறனில் ரிவர் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன. 120 முதல் 130 கி.மீ வரையிலான சிறப்பான மைலேஜ் மற்றும் குறைந்த மின் செலவு இதன் கூடுதல் பலம்,” எனத் தெரிவித்தனர். திறப்பு விழாவை முன்னிட்டு, புதிய வாகன முன்பதிவுகளுக்குச் சிறப்புத் தள்ளுபடிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.