• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளை பணியாளர் தின விழா..,

BySeenu

Feb 21, 2026

கோவை பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பணியாளர் தின விழா பி.எஸ்.ஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது.

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவன முதல்வரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் புகழைப் போற்றும் வகையில், அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு இவ்விழா ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டி, அவர்களைக் கவுரவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் பிரபல தமிழ்ப் பேச்சாளர் பட்டிமன்றம் எஸ். ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.