• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தென்கரை பகுதியில் முதியவர் சடலம்..,

ByKalamegam Viswanathan

Feb 14, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கண்மாய் கன்னிமார் கோயில் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் ஒன்று கிடப்பதாக காடுபட்டி போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் நேரில் விசாரிக்க சென்ற காவல்துறையினர்.

முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடப்பவர் விக்கிரமங்கலத்தை அடுத்த நரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி தேவர் மகன் ராஜேந்திரன் என்பது தெரிய வந்தது நரியம்பட்டியில் மளிகை கடை நடத்தி வரும் அவர் சோழவந்தானில் வந்து பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம் சம்பவத்தன்று வீட்டில் இருந்து கிளம்பி பொருட்கள் வாங்கசென்ற நிலையில் சோழவந்தான் அருகே தென்கரை கண்மாய் கன்னிமார் கோவில் பகுதியில் பிணமாக கிடந்துள்ளார்.

பிணத்தை கைப்பற்றிய போலீசார் இயல்பான மரணமா கொலையா தற்கொலையா அல்லது வேறு ஏதும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள். பிணத்தை கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தென்கரைப் பகுதியில் முதியவர் பிணம் கிடந்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.