• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை..,

ByKalamegam Viswanathan

Feb 14, 2026

கோவை: கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் அரங்கேறிய குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்தனர் பலர் படுகாயம் அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து வருடம் தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெறும். அதில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவர்

அதேசமயம் அதற்கு முந்தைய தினம் வருடம் தோறும் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சோதனைகள் மேற்கொள்ளுவர்.

அதன்படி இன்று குண்டுவெடிப்பு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு இன்று வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளை கொண்டு ரயில் நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம், ஆர் எஸ் புரம் உட்பட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.