• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByP.Thangapandi

Feb 12, 2026

உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தொழிற்சங்கத்தின் சார்பில் மத்திய அரசு தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து தொழிலாளர் விரோத சட்டத்தின் திரும்ப பெற வலியுறுத்தி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்ற சூழலில்,

இதன் ஒரு பகுதியாக இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மதுரை மேற்கு மாவட்ட தொழில் சங்கம் சார்பாக தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்காததை கண்டித்து மத்திய அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.,
இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.