மதுரை மாவட்டம் சோழவந்தன அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி (தற்போது மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது) 1997.98 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சமூக வலைதள மூலம் இணைந்து பள்ளியில் சந்தித்தனர்.

பின்பு தங்களது மலரும் நினைவுகளை ஒவ்வொருவராக பகிர்ந்து கொண்டனர் 97 98 ஆம் ஆண்டு ஆசிரியராக இருந்த பன்னீர்செல்வம் ஆசிரியருக்கு சால்வை மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர். இது போன்ற சந்திப்புகள் அடிக்கடி தொடர வேண்டும் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று ஒருவரை ஒருவர் தங்களது மலரும் நினைவுகளை பேசி பழகி பள்ளிக்கால நாட்களில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்தனர்.
தொடர்ந்து தாங்கள் படிக்கும் தருவாயில் நடந்து கொண்ட சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டு தொடர்ந்து பள்ளி முடித்து வாழ்க்கையில் பல்வேறு நிலைகளை அடைந்த வழிமுறைகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர் தற்போது ஒவ்வொருவரும் தாங்கள் பணிபுரிந்து வரும் துறை மூலம் நண்பர்களுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் கூறிச் சென்றனர் தொடர்ந்து குழுவாக இணைந்து அரசு உயர்நிலைப் பள்ளியாக இருந்த இந்த பள்ளிக்கூடம் தற்போது மேல்நிலைப் பள்ளியாக மாற்றம் கொண்டுள்ளதை பெருமையாக பேசினர். விரைவில் தங்களது குடும்ப சகிதத்துடன் மீண்டும் ஒரு சந்திப்பை நிகழ்த்தி அதன் மூலம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் பல்வேறு வகைகளில் உதவ இருப்பதாக கூறினர்.

28 ஆண்டுகளுக்கு பின்பாக சந்தித்தது நெகழ்ச்சியை ஏற்படுத்துவதாக கூறினார்கள். 28 ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் தற்போது சுகாதாரத்துறை உயர்கல்வித்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளில் இருப்பது தங்களுக்கு பெருமையாக இருப்பதாகவும் எதற்காக தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினர் பின்பு அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தங்களது ஆசிரியர்களின் வாழ்க்கை வழி நடப்பதாக கூறிய மாணவர்கள் தங்களது ஆசிரியரை முன்னாள் நடக்க விட்டு பின்னால் அனைவரும் சென்றது தற்கால மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருந்தது.
இதுபோன்று தற்போது உள்ள மாணவர்களும் தங்களது ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு உரிய மரியாதை அளித்து அவர்களது வாழ்க்கையை பின்பற்றி தங்களது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கூறினர்










