• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கிராமப் பகுதியில் 5 காட்டெருமைகள் வந்ததால் பரபரப்பு..,

Byமுகமதி

Feb 6, 2026

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே உள்ள கிராமப் பகுதியில் ஐந்து காட்டெருமைகள் வந்ததால் கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் உள்ள நார்த்தாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலைப்பகுதி என்பதாலும் காப்புக்காடுகள் நிறைந்த பகுதிகளாகவும் கோடைவெயில் அதிகரித்திருக்கும் போது தாகம் தீர்த்துக் கொள்ள மான்கள் ஊருக்குள் வருவதையும் காண இயலும்.

ஆனால் இன்று பகலில் ஐந்து காட்டெருமைகள் நார்த்தாமலை அருகில் உள்ள சித்துப்பட்டி என்ற கிராமப் பகுதியில் ஒரே நேரத்தில் வந்ததால் கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. காட்டெருமைகளால் மற்ற வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இப்போது மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். அந்த காட்டெருமைகள் எந்த பகுதிக்கு சென்று இருக்கிறது என்று கிராம மக்கள் தேடவும் தொடங்கி இருக்கிறார்கள்.