புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகக் கட்டமைப்பை ஏற்படுத்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக கட்டமைப்பை ஏற்படுவதற்கான கலந்தாய்வு கூட்டம் புதுக்கோட்டை உயர்தொடக்க பள்ளியில் மாவட்டச் செயலாளர் நாயகம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டப் பொருளாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் சரவண பெருமாள், அறந்தாங்கி கல்வி மாவட்டத் தலைவர் கோவிந்தராஜன், செயலாளர் தனபால், மாவட்டத் துணைத் தலைவர்கள் சரவண பெருமாள், தெய்வீகன் , மாநில செயற்குழு உறுப்பினர் முகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை வரவேற்று, ஒவ்வொரு ஆசிரியரும் நன்றி அறிவிப்பு மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என பேசினார்

இந்தக் கூட்டத்தில் வருகிற எட்டாம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பின் மூலம் நடத்தப்படும் உறுதிப் படுத்தப்பட்ட ஓய்வூதியத்திட்ட அறிவிப்புக்கான நன்றி அறிவிப்பு மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து ஆசிரியர் பெருமக்களும் பங்கேற்பதென முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் கஸ்தூரி ரங்கன், முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன், கல்வி மாவட்ட அமைப்புச் செயலாளர் தியானேஸ்வரன், கல்வி மாவட்டப் பொருளாளர் ஜோதிபாசு,
கந்தர்கோட்டை ஒன்றியத்தலைவர் ராஜேந்திரன், திருமயம் வட்டாரப் பொறுப்பாளர் ஷாம் சுந்தர், அரிமளம் வட்டாரத் தலைவர் வசந்தகுமார், விராலிமலை வட்டாரத் தலைவர் பாண்டியன், அன்னவாசல் ஒன்றியத் தலைவர் பால்ராஜ், கதிஜா பேகம்,
குண்டாண்டார் கோவில் பொறுப்பாளர்கள் செல்வகுமார், புதுக்கோட்டை வட்டார நிர்வாகிகள் யோகராஜ், சுப்பிரமணியன், சண்முகம், கந்தர்வகோட்டை வட்டாரப் பொறுப்பாளர்கள், கணேசன், பாரதிராஜா, மாரியய்யா குன்றாண்டார்கோவில் செல்வகுமார், பாஸ்கரன், உள்ளிட்ட திரளான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.










