• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

குளம் போல தேங்கியுள்ள கழிவு நீர்..,

விருதுநகர் கச்சேரிசாலையில் இருந்து கந்தபுரம் தெரு செல்ல கூடிய இடத்தில் தரைப்பாலம் அமைப்பதற்காக நேற்று சென்டரிங் போட தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிய போது அருகில் இருந்த கட்டிடத்தில் உள்ள பைப் வழியாக மலம் கலந்த கழிவு வந்துள்ளது.

இதனை கண்ட தொழிலாளர்கள் கட்டிட உரிமையாளரிடம் சென்று சொன்ன போது கழிவு நீர் வரத்தான் செய்யும் என்று கூறியுள்ளார், இதனால் தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாது என்று வேலையை விட்டு பாதியிலேயே சென்று விட்டார்கள். இதனால் தோண்டிய பள்ளம் மூட படாத நிலையில்,பாலம் கட்டும் பணியும் நின்று விட்டது. தற்போது அந்த பள்ளம் கழிவு நீர் குளம் போல காட்சி அளித்து வருகிறது.

இதனால் டெங்கு,மலேரியா போன்ற நோய்கள் பரவும் நிலை உள்ளது, இதற்கு நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.