• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு, டோப் செய்து எடுத்த நபர்கள்..,

BySeenu

Feb 4, 2026

கோவை மாநகரில் அண்மைக் காலமாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு அதிக அளவு நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிக அளவு நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கோவை மாநகர் ஒண்டிப்புதூர் பகுதியில் அமுல் ஆண்டனி என்பவரின் விலை உயர்ந்த டியூக் பைக்கை ஐந்து பேர் திருடிச் சென்று உள்ளனர்.
நேற்று இரவு வழக்கம் போல் அவர் பைக்கை வீட்டில் வெளியே நிறுத்திச் சென்ற நிலையில் இன்று காலை எழுந்து வந்து பார்த்தபொழுது அவரது பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் இவரது வாகனத்தை திருடிச் சென்றது பதிவாகி உள்ளது.

இரண்டு இரவு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் அப்பகுதியில் யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்டு இவரது வாகனத்தின் பூட்டை உடைத்து விட்டு திருடி உள்ளனர். ஐந்து பேரில் ஒருவர் இவரது வாகனத்தில் அமர்ந்து கொள்ள இன்னொரு இரு சக்கர வாகனத்தில் வந்தவர் உதவியுடன் டோப் செய்து (தள்ளி கொண்டு) திருடிச் சென்று உள்ளனர்.

இந்த காட்சிகளை கொண்டு அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் சி.சி.டி.வி கட்சியின் உதவியுடன் பைக்கை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.