தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்ற போது இந்துசமய மானியக்கோரிக்கையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர்,பழனி உள்பட பத்து திருக்கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்அடிப்படையில் திருச்செந்தூர்,பழனி கோவில்களில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை அனைத்து சிறப்பு தரிசன கட்டணமும் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் இலவச தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பழனி திருக்கோவில் நிர்வாகம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

அதேபோல் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு கோழி பலியிடவும்,ஸ்ரீகந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிக்க திட்டமிட்ட விவகாரத்திலும்,,தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்திலும் டெல்லி பாராளுமன்றம் உள்பட உலக முழுவதும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உலகப்புகழ் பெற்றுள்ளது.
இதனால் இத்திருக்கோவிலுக்கு முன்பை விட தற்போது பக்தர்கள் கூட்டம் தினந்தோறும் அதிகமாக வருகிறது. திருக்கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் உண்டியல் வருமானம் வந்த நிலையில் தற்போது பக்தர்களின் காணிக்கையாக இரண்டு கோடி ரூபாய் உண்டியல் வருமானம் திருப்பரங்குன்றம் திருக்கோவிலுக்கு வருகிறது.
திருச்செந்தூர்,பழனி போன்ற திருக்கோவிலுக்கு மட்டும் கட்டண தரிசனத்தை ரத்து விட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலை மட்டும் இந்துசமய அறநிலையத்துறை புறக்கணிக்க நினைப்பது திருப்பரங்குன்றம் முருகப்பக்தர்கள் மனதை புண்படுத்தும் செயலாகும்.
ஆகவே தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இந்துசமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கைகளில் திருச்செந்தூர்,பழனி கோவில்களுக்கு கட்டண தரிசனத்தை ரத்து செய்தது போல ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கும் சிறப்பு கட்டண தரிசனத்தை ரத்து செய்து மூன்று நாட்கள் பக்தர்கள் அனைவருக்கும் இலவச தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தும்,பழனி திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்,இனிப்பு பலகாரம்,தண்ணீர் பாட்டில் மற்றும் முருகன் படம் அடங்கிய பை போன்றவைகள் வழங்குவதை போல் திருப்பரங்குன்றம் திருக்கோவிலுக்கு தைப்பூச திருவிழாவை காணவரும் பக்தர்களுக்கும் அன்னதானம் உள்பட திருக்கோவில் நிர்வாகம் சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் நலன்கருதி திருக்கோவில் நிர்வாகத்திற்கும்,இந்துசமய அறநிலையத்திற்கும் இந்த அறிக்கையின் மூலமாக இந்துமக்கள்கட்சி கோரிக்கை வைக்கிறது.
மேலும் திருப்பரங்குன்றம் திருக்கோவில் தெப்பத்திருவிழா அன்று பக்தர்களை தெப்பத்திருவிழாவை பார்க்க முடியாத அளவிற்கு ஒவ்வொரு பகுதியிலும் காவல்துறை பேரி கேட் போட்டு அடைத்து வைத்து பக்தர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் காவல்துறையினரின் கெடுபிடியால் பக்தர்கள் தெப்பத்திருவிழாவை நேரில் காண முடியாமல் ஏமாற்றத்துடன் மனவேதனையோடு பாதியிலேயே திரும்பி சென்றனர்.
எனவே வருகின்ற தைப்பூச திருவிழா அன்று காவல்துறை மூலமாக பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு கெடுபிடி இல்லாமல் பக்தர்கள் மன நிம்மதியுடன் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை தரிசனம் செய்யவும்,பக்தர்களுக்கு குடிநீர்,கழிப்பறை போன்ற போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென மதுரை மாவட்ட அரசு நிர்வாகத்தை இந்துமக்கள்கட்சி வலியுறுத்துகிறது.










