மதுரை மாவட்டம் சோழவந்தான் இரட்டை அக்ரஹாரம் மலையாள கிருஷ்ண ஐயர் வேத பாடசாலையில் உலக நன்மை வேண்டி வேத பாராயணம் நடைபெற்றது. வாஷிக கிருஷ்ண யஜுர் வேதபிராமண சகித சம்பூர்ண க்ரம பாராயணம் நடைபெற்றது. ஸ்ரீ மணிகண்ட கனபாடிகள் தலைமை வகித்தார். வேத பாடசாலை அத்தியாபகர் வரதராஜ் பண்டிட் முன்னிலை வகித்தார்.

கடந்த 23ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முன்னாள் பாடசாலை மாணவர்கள் பல வேத விற்பன்னர்களால் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து நிறைவு நாளில் வேத வியாசருக்கு சிறப்பு பூஜை செய்து சோடச உபசங்களும் சதுர்வேத பாராயணமும் நாத கீத வாத்திய உபாசனைகள் நடைபெற்றது. கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை அரு. சீனிவாச ஐயர் செய்திருந்தார். இதில் சோழவந்தான் பகுதி மகளிர் குழுவினர் தென்கரை முள்ளிப்பள்ளம் மன்னாடிமங்கலம் குருவித்துறை கொடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்











