மதுரை மாவட்டம் செக்கானூரணியில் தேனி மெயின் ரோட்டில் தனியார் மணமகிழ் மன்றம் அமைக்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவது தொடர்பாக மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது

மதுரை கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் செக்கானூரணி அமைந்துள்ளது இந்த பகுதியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளிக்கு அருகில் தனியார் மதுபான பாருடன் மணமகிழ் மன்றம் தொடங்க ஏற்பாடுகள் நடக்கிறது இந்த மனமகிழ் மன்றத்திற்கு அருகில் கோவில் திருமண மண்டபம் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் பெண்கள் விடுதி ஆகியவை உள்ளன
இந்த பகுதியில் மதுபான பார் மற்றும் மனமகிழ் மன்றம் திறப்பதால் சட்ட விரோத நடவடிக்கைகள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே புதிதாக தொடங்க உள்ள தனியார் மதுபான பாருடன் கூடிய மணமகிழ் மன்றம் தொடங்க தடை விதிக்க வேண்டும் என்று மனு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

இந்த மனு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மரிய கிளாஸ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது அரசு வக்கீல் ஆஜராகி மனுதாரர் தெரிவிக்கும் பகுதியில் இதுவரை மதுபான பாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தகவல் தெரிவித்தார்
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அரசு தரப்பில் இங்கு தெரிவித்த உத்தரவாதத்தை மீறி அனுமதி வழங்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை இடிக்க உத்தரவிட நேரிடும் என எச்சரித்து இது சம்பந்தமாக மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஆயத்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி குடியரசு தினத்தை ஒட்டி அ கொக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தனியார் மதுபான கூடத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை அதாவது நேற்று காலை
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மதுபான கூட்டத்திற்கு முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு முற்றுகை செய்தனர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செக்கானூரணி காவல்துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் கூறுகையில் ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு வழங்கிய நிலையிலும் பொதுமக்கள் இதனால் அதிக அளவில் பாதிப்படையும் சூழ்நிலையிலும் தொடர்ந்து இந்த மணமகிழ் மன்றத்தை திறக்க அனுமதிக்க கூடாது மீறி திறந்தால் பொதுமக்கள் ஒன்று திரண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடவோம் மதுரை கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தகவல் தெரிவித்தனர் பொதுமக்களுக்கும் பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் தொடங்க உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் அதனை திறக்க அனுமதிக்க கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
குறிப்பு
இந்த நிலையில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி மதுபான கடை அமைக்க கடையை திறந்து பூஜை செய்ததாகவும் வரும் ஞாயிற்றுக்கிழமை மதுபான கடை திறக்க இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால் கடை திறக்க உள்ள ஞாயிற்றுக்கிழமை அன்று மிகப்பெரிய அளவில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மறியல் செய்யப் போவதாகவும் தெரிவித்தனர்.










