மதுரை மாவட்டம் செக்கானூரணி தேனி மெயின் ரோட்டில்அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மது பானகடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளி மாணவ மாணவியர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். மதுபானகடை முன்பு முற்றுகையிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறும்போது

பிராந்திகடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022 ஆம் ஆண்டு மனு அளித்தோம் அதனால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது தற்போது ஆயத்தப் பணிகள் நடந்து வரும் நிலையில் இது குறித்தும் ஆ. கொக்குளம் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட மதுபானகடை திறக்க அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களிடம் செக்கானூரணி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.






