சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் Wசக்தி பவுண்டேஷன் இணைந்து புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை அருகிலுள்ள சிக்னலில் தலைவர் கண.மோகன் ராஜா தலைமையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கையேடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா வரவேற்றார். நிகழ்ச்சியில் நகர போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் அழகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கையேடு வழங்கும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து சாலைப் பாதுகாப்பு குறித்து பேசினார். நிகழ்ச்சியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கச் செயலாளர் AMS.இப்ராஹிம் பாபு, போக்குவரத்து காவல்துறை நண்பர்கள் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் R.சங்கர், BK.கண்ணன், உடற்கல்வி ஆசிரியர் SP.முத்துராமலிங்கம் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







