விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து கேமராக்களை பராமரிக்கப்படாததால் சில கேமராக்கள் சேதம் அடைந்துள்ளன. சேதமடைந்து பல மாதங்கள் ஆகியும் பழுது பார்க்கப்படாமல் உள்ளது. இதனால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் கண்காணிப்பு கேமராவில் பதிவுகளை பார்க்க முடியாத நிலை ஏற்படும் ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கேமராக்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்







