மதுரை மாவட்டம் சோழவந்தானில் போக்குவரத்து நெருக்கடியால் இரு தரப்பு ஓட்டுநர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதும் எதிரெதிர் வரும் வாகனங்கள் வழி விடாமல் நின்று கொண்டு இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகும்.

தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கின்றனர் போக்குவரத்து கழக அலுவலர்களுக்கும் இதனால் காலதாமதம் ஏற்படுவதுடன் பல்வேறு மன அழுத்தங்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர் குறிப்பாக மதுரை திருமங்கலம் செக்கானூரணி சமயநல்லூர் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் சோழவந்தான் நகருக்குள் வந்தவுடன் பேருந்து நிலையம் செல்லாமல் ஜெனகை மாரியம்மன் கோவில் வழியாக திரும்பிச் செல்வதால் குருவித்துறை கருப்பட்டி மற்றும் சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் வாகனங்கள் ஜெனகை மாரியம்மன் கோவில் வழியாக வெளியேறி செல்ல வேண்டிய நிலை இருப்பதால மாரியம்மன் கோவில் பகுதியில் எதிரெதிரே வாகனங்கள் நின்று கொண்டு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது மேலும் எதிரெதிரே நிற்கும் வாகனங்கள் ஒருவருக்கொருவர் வழி விடாத நிலையில் இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் காலதாமதம் ஏற்படுவதாக கூறுகின்றனர்
இன்று காலை 11 மணியளவில் மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து வந்த தனியார் பேருந்து பேருந்து நிலையம் செல்லாமல் ஜெனகை மாரியம்மன் கோவில் வழியாக திரும்பிய நிலையில் வத்தலகுண்டுவில் இருந்து வந்த லோடு வண்டி எதிரே வந்தது மாரியம்மன் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் வழிவிடாமல் சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இருவரும் கீழே இறங்கி கைகலப்பில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டது அப்போது அருகில் இருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி வாகனங்களை எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு கடுமையான சிரமங்கள் ஏற்படுவது உடன் அரசு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கும் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுவதாக கூறுகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சோழவந்தானில் ஒருவழிப்பாதையை கண்டிப்பான முறையில் அமுல்படுத்தி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






