• Thu. Jan 29th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

மானாவாரி நிலங்களுக்காக வைகை பாசனமுறை கால்வாய் அமைக்கப்படுவது எப்போது?

ByKalamegam Viswanathan

Jan 29, 2026

மதுரைமாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அதிககிராமங்களே உள்ளன,இந்த தொகுதியை பொறுத்தவரைவிவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.நாகமலை புதுக்கோட்டை ஏற்குடிஅச்சம்பத்து புதுக்குளம், வடிவேல்கரை,விளாச்சேரி,நிலையூர், சூரக்குளம் உள்ளிட்ட சில கிராமங்களுக்கு சோழவந்தான் முள்ளிபள்ளம் வைகை படுகையில்இருந்து நிலையூர் கால்வாய் வழியாக பாசனத்திற்காக வைகை தண்ணீர் வருகிறது. அதுவும் முறை பாசனம் என்று தண்ணீர் திறக்கப்படுவதில்லை.

கனமழை பெய்து வைகை அணை நிரம்பிய நிலையில் உபரி தண்ணீர் திறக்கப்பட்டுகண்மாய்களுக்கு வருகிறது. இதே சமயம் வடிவேல்கரை கிராமத்தின் மிகஅருகே உள்ளகீழக்குயில்குடி, மேலக்குயில்குடிக்கு வைகை பாசனம் இல்லை. இதே போலதென்பழஞ்சி, நெடுங்குளம், வெள்ளப்பாறைப்பட்டி, சாக்கிலிப் பட்டி, சின்னசாக்கிலிப்பட்டி,வேடர் புளியங்குளம்,தனக்கன்குளம் தோப்பூர் ஆகிய கிராமங்களுக்குவைகை தண்ணீர் பாசனவசதி இல்லை.இந்த பகுதிகள் யாவும்வானம் பார்த்த பூமியாக இருந்து வருகிறது..பல நாட்கள் தொடர்ந்துகனமழை பெய்துகண்மாய்கள் நிரம்பி மடையில் தண்ணீர் ஏறும்பட்சத்தில் மட்டுமே விவசாயம் செய்யும்நிலை இருந்து வருகிறது.மாவிலிபட்டிகண்மாயில் இருந்து தென்பழஞ்சி வரை சுமார் 2. கி.மீ.தூரம்கால்வாய் உருவாக்கினால் மாவிலிப்பட்டிகண்மாய்க்கு வரக்கூடிய வைகை தண்ணீரை தென்பழஞ்சியில் இருந்து தோப்பூர் வரை கொண்டு செல்லலாம்.

இதே போலசெக்கானுரணி அருகே உள்ளஅடைக்கம்பட்டிபகுதியில் இருந்து புதியதாககால்வாய் உருவாக்கினால்வடபழஞ்சி கரடிபட்டி முத்துப்பட்டி ஆலம்பட்டி மேல கோயில் குடி கீழக்குயில்குடி வரைவைகை தண்ணீர் பாசனத்திற்காக கொண்டு வரலாம்.இதனால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டவிவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.இதன் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகளின்வாழ்வாதாரம் செழிப்படையும்.கடந்த 1994 ஆண்டில்விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டுஅப்போதையஅமைச்சர் உரிய இடத்தை பார்வையிட்டுகால்வாய் அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யுமாறுசம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்தெரிவித்தார்.அதன்படியே அதிகாரிகள் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்தனர்.இந்த நிலையில் ஒரு சில வாரங்களில் அரசாணை வெளியிடப்படும். இதனையடுத்துகால்வாய் வெட்டப்பட்டு வைகை தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்படும் என்று 20க்கும்மேற்பட்ட கிராம விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் நடப்பு ஆண்டு வரைகால்வாய் வெட்டாத நிலையில்விவசாயிகளின் கோரிக்கையானது காணல் நீராகவே இருந்து வருகிறது.

வானம் பார்த்த பூமியாகஇருப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைபெற்றஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும்,பாராளுமன்ற தேர்தலிலும்வேட்பாளர்கள் அனைவரும்வானம் பார்த்த பூமியாக உள்ள மானவாரிநிலங்களுக்கு வைகை தண்ணீர் கொண்டு வருவதற்காக கால்வாய் வெட்டப்படும்.அதற்காக சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுப்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இது தொடர்பாக “தினத்தந்தி ” நாளிதழில்செய்தி பிரசுரிக்கப்பட்டது.இது தொடர்பாக சமீபத்தில் சட்டமன்றத்தில்ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

அதன் பயனாக துறைஅமைச்சர் உத்தரவின்படி கடந்த 1994 க்கு பிறகுகடந்த சில மாதங்களுக்கு முன்பு 2வது முறையாகதிருமங்கலம் விஸ்தரிப்பு கால்வாயான தேங்கில்பட்டிகால்வாய் பகுதியில் இருந்து வடபழஞ்சி,கரடிப்பட்டி மேலக்குயில்குடி, கீழக்குயில்குடிவரையிலும் ஒரு பகுதியாகவும்,தென்பழஞ்சி,சாக்கிலிப் பட்டி வேடர் புளியங்குளம்,தோப்பூர் வரையிலும்மற்றொரு பகுதியாகவும் கால்வாய் அமைப்பதற்குகுண்டாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதற்கட்டமாகஅளவிடு செய்தனர். 2-ம் கட்டமாக மண்பரிசோதனை செய்தனர். மேலும் மதிப்பீடு தயார் செய்துஉயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர் இதை கண்ட விவசாயிகள் தங்களது 50 ஆண்டுகளுக்கு மேலானகோரிக்கை நிறைவேறப் போகிறது என்று எதிர்பார்ப்பு மீண்டும் நிலவியது. ஆனால் அதற்கு உரிய பணிகள் நடந்த பாடில்லை. ஒரு சில மாதத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

வழக்கம் போலதேர்தலில்விவசாயமும், விவசாயிகளும் எங்களுக்கு முதுகெலும்பு ஆகவேகால்வாய் அமைக்க குரல் கொடுப்போம் என்று கூறி விவசாயிகளிடம் ஓட்டுக்கள் கேட்டும் நிலையே தொடருமா? அல்லதுமாவட்ட நிர்வாகத்தின் மூலம்அரசின்கவனத்திற்கு கொண்டு சென்று போர் காலஅடிப்படையில்மானாவாரி நிலங்களுக்காக வைகை பாசன கால்வாய் வெட்டப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக வைகை தண்ணீர் முறைபாசன வசதி கிடைக்குமா? என்றுவிவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். விவசாயிகள் :

  1. பச்சைதுண்டு பாண்டி
  2. சிவராமன்
    ஆகியோர் கூறியதாவது
    கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்துமானாவாரி நிலங்களுக்கு வைகை பாசனம் பெறுவதற்காக கால்வாய் அமைத்து வைகை தண்ணீரை கண்மாய்களுக்குகொண்டு வர வேண்டும். அதுவும் உபரி தண்ணீராக இல்லாமல் முறை பாசன வசதிசெய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இதேகோரிக்கையைஒவ்வொரு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திலும் வலியுறுத்தி வருகிறோம். மேலும் எண்ணற்றமனுக்கள் கொடுத்திருக்கிறோம். 1994-ல்பால் வார்த்தை மாதிரிகால்வாய் அமைக்க திட்டம் மதிப்பீடு செய்தனர்.பின்னர் அதோடு நின்று விட்டது.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குண்டாறுபொதுப்பணித்துறை அதிகாரிகள்மீண்டும் 2-வது முறையாககால்வாய் அமைப்பதற்குஇடத்தை ஆய்வு செய்து அளவீடு செய்தனர்.மேலும் மண் பரிசோதனை செய்தனர். அதில் நாங்களும்கலந்து கொண்டோம்.. இந்த நிலையில்மதிப்பீடு தயார் செய்து வருவதாகஅதிகாரிகள் தெரிவித்தனர் .மாதங்கள் உருண்டோடியும்.உரிய பணி நடந்த பாடு இல்லை.இனியும் காலம் தாமதப்படுத்தாமல்மாவட்ட நிர்வாகம்தலையிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வைகை தண்ணீர் முறை பாசன வசதி பெறகால்வாய் அமைக்க வேண்டும் என்றனர்.