அரியலூர் மாவட்டம், கீழப்பழூரில் மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இரா.பார்த்தசாரதி தலைமை வகித்தார். அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா கலந்து கொண்டு பேசியது: தமிழகத்தில் திராவிட அடையாளத்தை அழிக்க நினைப்பவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது, அது நிலைத்து நிற்கும். தமிழை பாதுகாத்த தியாகிகளின் தியாகம் போற்றுதலுக்குரியது. தற்போது பல்வேறு நிலைகளில் மத்திய அரசு ஹிந்தியை திணிக்க முயற்சித்து வருகிறது. இதில் இருந்து தமிழர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மொழியை பாதுகாப்பதில் ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

திமுக அரசு மொழி, மண், மானதை காத்து வருகிறது. மொழிப் போர் தியாகிகளுக்கு மணிமண்டபங்களை கட்டி, அவர்களின் தியாகங்களை போற்றி வருகிறது என்றார்.
கூட்டத்தில், மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியதேவன், மாநில மகளிரணி அமைப்பாளர் மல்லிகா தயாளன், கட்சியின் மாவட்டச் செயலாளர் க. இராமநாதன்,மாநில விவசாய அணிச் செயலாளர் கி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மாவட்ட அவைத் தலைவர் சகாதேவன், தலைமை செயற் குழு உறுப்பினர் தங்கவேல், மாவட்ட துணைச் செயலாளர் கலிஸ்துராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கராசு, வி எஸ் கொளஞ்சி (எ) சிவக்குமார், தே. டேவிட் மோகன்தாஸ் அரியலூர் ஒன்றியச் செயலாளர்கள் பி.சங்கர்(வடக்கு), ஆ.அண்ணாதுரை(தெற்கு), தா.பழூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் கவிஞர் எழிலரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக திருமானூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் விளாகம் கு.பிச்சைப்பிள்ளை வரவேற்றார். முடிவில் திருமானூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் நெ.ரமேஷ்பாபு நன்றி கூறினார்.






