தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருக்கும் போராட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

10 ஆண்டுகள் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலராகவும் 20 ஆண்டுகள் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவருக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலராக ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் கல்வித் தகுதியை பட்டய படிப்பாக மாற்ற வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தில் நவீன மயமாக்கப்பட்ட அடிப்படை வசதிகளில் இருக்க கூடிய அலுவலகமாக தரம் உயர்த்த வேண்டும்.
அலுவலகத்தில் இணையதள வசதி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோழைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் வட்டாரத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் பொருளாளர் சுரேஷ் உட்பட கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.






