மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பாக காரியாபட்டியில் இருந்து தாதம்பட்டிக்கு வைக்கோல் ஏற்றி க்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக மின் கம்பியில் உரசியது.

இதனால் வைக்கோலில் தீப்பிடித்து புகைய தொடங்கியது. உடனே லாரி டிரைவர் அதை தாதப்பநாயக்கன்பட்டி பிரிவு சாலை ஓரம் நிறுத்தினார். அதற்குள் தீ வேகமாக பரவி எறிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. தகவல் அறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) ஆல்பர்ட் பிரான்சிஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 1 1/2 நேரம் போராடி உள்ளிருந்த வைக்கோல்களை அகற்றி தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






