மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் டாக்டர் எம் மருதுபாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்துபள்ளி மாணவர்களுக்கிடையே பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி பாடல் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.

வெற்றி பெற்றவர்களுக்கு பாஜக மாநில விவசாய அணி துணை தலைவர் தொழில் அதிபர் மணிமுத்தையா பரிசுகள் வழங்கினார். பள்ளி நிர்வாகி வள்ளியில் முன்னிலை வகித்தார். முதல்வர் தீபா ராகினி வரவேற்றார். மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குடியரசு தின விழாவின் போது விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதேபோல் சோழவந்தான் பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளிகளில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைமை ஆசிரியர்கள் தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினார்கள்.






