தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் விசில் சின்னத்தை தொகுதி வாரியாக பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தும் பணியில் கட்சி நிர்வாகிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மதுரை மேல அனுப்பானடி பகுதியில் அக்கட்சியின் நிர்வாகி ராஜ்மோகன் தலைமையில் “வீதியெங்கும் விஜயின் விசில்” பிரச்சாரம் நடைபெற்றது.
முன்னதாக, அப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து, ராஜ்மோகன் தலைமையில் தொண்டர்கள் மேல அனுப்பானடி பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று, கட்சியின் கொள்கைகளை விளக்கியும், எதிர்வரும் தேர்தலில் கட்சியின் அடையாளமான ‘விசில்’ சின்னத்திற்கு ஆதரவு தருமாறும் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

திரைப்பட நடிகரும் எழுத்தாளருமான வேல ராம மூர்த்தியின் மகன் ராஜ்மோகன்
“வீதியெங்கும் விஜயின் விசில்” களப்பணியில் நேரடியாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.






