மதுரை மாநகர காவல் துறை ஆணையர் முனைவர் j லோகநாதன் ips ‘ஏன் அவசரம்’ எனும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடு வெளியீடு செய்யப்பட்டு, படக்குழுவினருக்கு கேடயமும், பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது ..37 வது தேசிய சாலைபாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு பல்வேறு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ‘ஏன் அவசரம்’ எனும் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளது..இந்த குறும்படத்தில் பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் மதுரை முத்து நடித்தும் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் கதை வசனத்தில்,
C. G. விபின் அவர்களது ஆக்கத்தில் R.. P. காளிதாஸ் இயக்கியுள்ளார்..ஒளிப்பதிவு சென் செந்தில், இசை ஜெய k தாஸ், படத்தொகுப்பு சூரியப்பிரகாஷ் மேற்கொண்டுள்ளனர் .. சிரிப்பும் சிந்தனையும் கொண்ட இந்த விழிப்புணர்வு குறும்படத்தில் இன்றைய நாட்களில் வீட்டில் தாமதமாக புறப்பட்டுவிட்டு அந்த நேரத்தை ஈடுகட்ட சாலையில் வேக வேகமாகவும் அவசரமாகவும் பதற்றதுடன் செல்வதால் ஏற்படக்கூடிய விபரீதங்கள் குறித்தும் அதன் விளைவுகளால் அடையும் உடல், பொருளாதார ரீதியான இழப்புகள் குறித்தும் சிரிப்பும், சிந்தனையும் கலந்து இன்றைய தலைமுறையினர் சமூக அக்கறையுடன் செயல் பட வேண்டிய அவசியம் குறித்தும் சாலைபாதுகாப்பு உயிர்ப்பாதுகாப்பு என்பதனை விளக்கி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.







