• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி மோதி 3 பேர் பலி!!

ByKalamegam Viswanathan

Jan 25, 2026

மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே சாலை நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்து மூன்று பேர் பலி 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி டி அருந்துவதற்காக நெடுஞ்சாலையில் மற்றொரு ஆம்னி பேருந்து ஒன்று சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்தது.

மதுரையை நோக்கி அப்பொழுது இப்பொழுது நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது அத்தி பயங்கரமாக பின்பகுதியில் மோதியது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து எதிரே உள்ள சாலைக்கு சென்று மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் பதினைந்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மதுரை மற்றும் மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலூர் டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் பெயர் மனோரஞ்சிதம் வயது 56 மற்றொரு பெண் திவ்யா மற்றும் சுதர்சன் ஆகியோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.