• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பட்டத்தரசி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

ByKalamegam Viswanathan

Jan 23, 2026

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில், அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பட்டத்தரசி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவை ஒட்டி , சிவாச்சாரியார்கள் யாகசாலை வேள்வியினை நடத்தினர் கணபதி பூஜை உடன் தொடங்கி மகா பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, காலை ஒன்பதரை மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு ஆகி திருக்கோவிலை சுற்றி வலம் வந்து கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கடன் வட்டமிட்டது தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. விழாவில்,
இரும்பாடி பாலகிருஷ்ணாபுரம் கருப்பட்டி சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, திருப்பணி குழுவினர் மற்றும் கிராம பாலகிருஷ்ணாபுரம் பொதுமக்கள் செய்திருந்தனர்.