மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின்போது காளைகள் சேகரிக்கும் பகுதியில் வெளியேறிய காளை ஒன்று அலங்காநல்லூர் கேட்டுகடை பகுதியில் பேருந்தில் செல்வதற்காக நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது முட்டியது
இதில் மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் பகுதியைச் சேர்ந்த சேகர்(65) மற்றும் மூதாட்டி என இருவர் பலத்த காயமடைந்தனர்

இதையடுத்து சேகர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றபோது பேருந்துக்காக காத்திருந்த முதியவர் மீது மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஏற்கனவே பாலமேடு ஜல்லிக்கட்டின் போது பார்வையாளராக இருந்த மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் உயிரிழந்த நிலையில் தற்போது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பேருந்துக்காக காத்திருந்தவர் மீது மாடு முட்டியதில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது





