• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பேராசிரியரின் நூற்றாண்டு விழா : திருப்புவனத்தில் திமுகவினர் இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் மானாமதுரையில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாளை, திமுகவினர் வெகு விமரிசையாக கொண்டாடினர்.

திருப்புவனத்தில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் பேருந்து நிறுத்தம், மார்கெட் வீதி, சிவகங்கை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்டோருக்கு இனிப்புகள் வழங்கினர். பேராசிரியரின் சிறப்புகள் , அவரின் பேச்சுகள், கருத்துகள் பற்றியும் எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் கடம்பசாமி, வசந்தி சேங்கை மாறன், நகரச் செயலாளர் நாகூர்கனி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.