• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை பணி மன்றத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்

Byகுமார்

Dec 19, 2021

தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை பணி மன்றத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இருபத்தி ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து மாநில தலைவர் கூறும்போது, அரசின் ஆணையை ஏற்று நாங்கள் தணிக்கை அறிக்கையை மேற்கொள்வோம். எங்களுக்கு என அலுவலகம் கிடையாது, பணிமாற்றம் பதவி உயர்வு போன்றவற்றை கலந்தாய்வு முறையில் நடத்த வேண்டும் மூன்று வருடத்திற்கு ஒரு முறையாவது பொது பணி மாற்றம் ஏற்படுத்தித் தர வேண்டும். நாங்கள் பேரூராட்சி கிராம ஊராட்சிகள் மற்றும் பஞ்சாயத்து மூன்று அடுக்குகளாக தணிக்கை அறிக்கை வெளியிடுகிறோம். 70 நாட்கள் பார்க்க வேண்டிய தணிக்கையை வெறும் ஏழு நாட்களில் பார்ப்பது சிரமமாக இருப்பதால் எங்களுக்கு கால அவகாசம் ஏற்படுத்தித் தர வேண்டும் அவ்வாறு ஏற்படுத்திவிட்டால் தரமான தணிக்கை அறிக்கையை நாங்கள் வெளியிடுவோம். என தெரிவித்தார்.