மதுரை ரயில்வே கோட்டத்தின் மூத்த வர்த்தக மேலாளர் கணேஷ் அவர்களுக்கு ரயில் சேவா புரஸ்கார் விருதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் கடந்த 9ஆம் தேதி டெல்லியில் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை மதுரை வருகை புரிந்த மூத்த வர்த்தக மேலாளர் கணேஷ் அவர்களுக்கு அரசரடி ரயில்வே மைதான பொறுப்பாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சுதாகர் அவர்கள் பூ கொத்து கொடுத்து வரவேற்றார் இந்நிகழ்வில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர் ஜோசப் உள்பட பலர் உடன் இருந்தனர்..




