• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஒரே வாரத்தில் அடுத்தடுத்த கொடூரம். . . சமூகநலத்துறை தூங்குகிறதா ?

கொடைக்கானலில் உள்ள கீழ்மலை கிராமமான பெரும்பாறையை அடுத்த பாச்சலூரை சேர்ந்தவர் சத்யராஜ். இவருடைய மகள் பிரித்திகா (வயது 10). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் மாணவி பிரித்திகா பள்ளிக்கு சென்றார். காலை 11 மணிக்கு வகுப்பறையை விட்டு வெளியே சென்ற அவள், திரும்பி வரவில்லை.
பின்னர் சக மாணவிகள் தேடிச்சென்ற போது, விளையாட்டு மைதானத்தில் பிரித்திகா உடல் கருகி நிலையில் இருந்தது . மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவள் பரிதாபமாக உயிரிழந்தார் .

இதற்கிடையே பிரித்திகா எரித்து கொல்லப்பட்டதாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியலிலும் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஆர்பாட்டத்திள் ஈடுபட்டனர்.


இது போன்ற மற்றொரு சம்பவம் கோவையில் அரங்கேறியது


கோவை சரவணம்பட்டி பகுதி யமுனா நகரில் நேற்று (டிச.16) கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் 14 வயது சிறுமியின் உடலானது கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், 13ம் தேதியன்று அந்த சிறுமி மாயமானதாக அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தது தெரியவந்தது. டிச.11-ல் சிறுமி காணாமல் போயிருந்தார். இந்நிலையில் 5 நாட்களுக்கு பிறகு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் முட்புதரில் டிச.16ந் தேதி சடலாமாக மீட்கப்பட்டார்.


இந்த கொலை குறித்து விசாரித்த போது குற்றவாளி இறந்த சிறுமியின் தாயின் நண்பர் என்றும், தங்க நகைக்காக சிறுமியை கொன்றுள்ளது தெரியவந்துள்ளது.மேலும் பாலியல்வன்கொடுமை செய்யபட்டார என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதே டிச.16 ந் தேதி விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தள்ளுவண்டியில் ஐந்து வயது சிறுவனின் உடல்கிடந்ததை கண்டு தள்ளு வண்டி உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுக்க உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுவன் கொலை செய்து வீசப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இப்படி ஒரே வாரத்தில் அடுக்கடுக்கான சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து இதுநாள் வரை பெண்கள் குழந்தைகள் நலத்துறை சார்பில் எந்த வித அறிக்கையோ ,நடவடிக்கையோ எடுத்ததாக தெரியவில்லை.

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுனர் நடத்துனர் கைது செய்யபடுகின்றனர்.என்ன நடக்கிறது தமிழகத்தில் இது தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் லட்சணமா. குழந்தைகள் குறித்து எதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே அதுகுறித்து விசாரிப்பது துறை சார்ந்த நடவடிக்கை எல்லாம் மற்ற நாட்களில் அப்படியே விட்டுவிடுவது.அரசியல்வாதிகள் செய்வதை தான் அரசு அதிகாரிகளும் காப்பி அடித்து செய்து கொண்டிருகின்றனர்.

பெண்கள் பாதுகாப்பிற்கு என்று எடுத்த மிக சிறப்பான நடவடிக்கை என்ன ?இலவசமாக பேருந்து பயணம் குறித்து அறிவித்தால் போதுமா அங்கு பெண்கள் எவ்வளவு கண்ணியமாக நடத்தப்படுகின்றனரா உரிய மரியாதை கொடுக்க படுகிறதா,எந்த விதமான நெருக்கடிகளை சந்திக்கிறார்கள் என்று விசாரித்து அதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதா?.இப்படி இவ்வளவு பிரச்சனை இருக்கும் நிலையில் சமூகநீதி காக்கும் போற்றும் அரசின் சமூகநலத்துறை தூங்குகிறதா?