திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்லத்தி மரத்தில் தர்கா கொடியேற்றப்பட்டதை கண்டித்து அந்த கொடியை அகற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா உள்ளிட்ட பாஜகவினர் மலைமேல் நெல்லி தோப்பு அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தற்போது காவல்துறையினர் அவர்களை கீழே அழைத்து வருகின்றனர்.

1923 ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றம் இந்த நாளை தீர்ப்பளித்தது அந்த வழக்கு நமக்கும் இஸ்லாமியர்களுக்குமான வழக்கு அல்ல இந்த மலையின் மீது இருக்கின்ற உபயோகத்தில் இல்லாத நிலம் அரசுக்கு சொந்தமானது என்று அரசாங்கம் உரிமை கொண்டாடியது. கோவில் இதற்கு எதிராக கோவில் நிர்வாகம் வழக்கு தொடர்ந்ததற்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டு இருந்தது. அதில் கிரிவலப் பாதைக்கு உள்ளே இருக்கின்ற மலைக்குள் இருக்கும் இடம் கோவிலுக்கு சொந்தம், உரிமை கொண்டாடுகின்ற கட்டிடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தர்கா என்று கூட குறிப்பிடவில்லை.
இது தமிழக அரசு சுற்றுலாத்துறையில் கையேட்டில் சிக்கந்தர் பாதுஷா தர்காவிற்கு கல்லறை கோரிப்பாளையத்தில் உள்ள மசூதியில் இருக்கிறது என்று அரசு ஆவணம் சொல்கிறது.
கிரிவல பாதைக்கு உள்ளே இருக்கும் இடம் அனைத்தும் என்றால் 33 சென்ட் தவிர சொந்தம் என்று உள்ளது. இந்த அறநிலையத்துறை கந்தர் மலை என்று குறிப்பிடுகிறார்கள். எனவே ஹிந்துக்களின் உரிமையை விட்டுக்கொடுத்து வராதீனப்படுத்த என்ற இன்று விரோத நிர்வாகம் தமிழகத்தில் இருக்கிறது. உயர் நீதிமன்றம் முதலில் தனிநபர் அமர்வு சாமிநாதன் தெளிவாக தீர்ப்பு கொடுத்திருந்தார் அதற்கு எதிராக மேல்முறையீடு சென்றார்கள் அதில் கொடுத்த தீர்ப்பு நாதன் தீர்ப்பை முழுமையாக ஏற்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். இதற்குப் பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தற்போது நடைபெறுகிறது.
அந்த சந்தனக்கூடு கொடிமரம் கொண்டு சென்ற அன்று உள்ளூரில் உள்ள பெண்களை கைது செய்து அவர்களை எப்போது பார்க்க சென்றபோது காவல்துறையை ஆணையரிடம் கொடியேற்றுவது தொடர்பாக சொல்லி இருந்தேன்.

கோவில் சொத்துக்களை காப்பாற்ற அறநிலையத்துறை தவறிவிட்டது. ஹிந்து கோவிலுக்கு இடத்தின் உரிமைக்கான பிரச்சனை இல்லை. இந்துக்களின் உரிமைக்கான பிரச்சனை.
அவர்களுக்கு சொந்தமான இடம் தவிர மற்ற இடத்தில் பிணங்களை புதைக்க எப்படி அனுமதித்தனர். மேலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கொடியேற்றி இருக்கிறார்கள். ஆசை விசுவநாதர் கோயிலுக்கு செல்வதற்கு திட்டமிட்டு தான் வந்தேன் ஆனால் காவல்துறையின் முட்டுக்கட்டை காரணமாக காலதாமதம் ஆகிவிட்டது. பள்ளத்தை மரத்தில் பிறை கொடி ஏற்றி இருப்பதை இன்னும் இறக்கப்படாததை நேரடியாக பார்த்துவிட்டு வந்தேன். அதை அகற்ற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்து கடவுள்கள் மட்டுமே சட்டப்படி உரிமையாளர்கள். அறநிலையத்துறை பொறுப்பு தான் உரிமையாளர் சுப்பிரமணியசாமி. அவரின் இடத்தில் அத்துமீறி ஆக்கிரமித்து பிறை கொடியேற்றி இருப்பதை. நீதிபதி ஆட்சியபத்தும் நீக்கப்படாதது வன்மையாக கண்டிக்கத்தக்க இந்து விரோத செயல். அது உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நீதிமன்றம் சொன்ன பிறகு எஃப் ஐ ஆர் போடுவீர்களா. யார் இடம் என்று நீதிமன்றம் கேட்டதால் அறநிலையத்துறையுடையது என்று சொன்னார்கள் இல்லை என்றால் சொல்லி இருக்க மாட்டார்கள்.
இந்துக்களுக்கு சொந்தமான தீபத்தூணை பிணம் புதைக்கும் இடம் என்று சொல்கிறார் சட்ட அமைச்சர்.
அப்படி என்றால் உங்களுடைய மரியாதைக்குரிய திமுக தலைவர் கருணாநிதியை புதைக்க கண்ணம்மா பேட்டை தான் சென்றிருக்க வேண்டும் கடற்கரைக்கு ஏன் சென்றீர்கள். இந்துக்களை என்ன வேண்டும் என்றெல்லாம் கேட்கலாம் அவர்களுக்கு சொரணை இல்லை என்று அந்த அமைச்சர்கள் நினைக்கிறார்கள்.
அந்த தீய சக்திகளை வரும் தேர்தலில் இந்துக்கள் வீருகொண்டு எழுந்து திமுக ஆட்சிக்கு இறுதி அத்தியாயம் எழுதுவார்கள்.
வழக்கு பதிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள் அதற்கு என்ன தேவை அது ஒரு ஆக்கிரமிப்பு. அறநிலையத்துறை நேரடியாக சென்று அகற்றி இருக்க வேண்டும் அதை நீதிபதியும் செய்ய சொல்கிறார்.
இந்துக்களுக்கு நீதி கேட்பது இந்த அரசுக்கு தவறாக தெரியலாம். மிகப் பெரிய தவறு இங்கு நடந்துள்ளது.
மாண்புமிகு பிரதமர் மதுரைக்கு அல்லது சென்னைக்கு வரலாம் அவரது கான்வாயை அட்டாக் செய்வேன் என்று சொன்ன விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை ஏன் கைது செய்யப்படவில்லை.
கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற மறுத்த பாஜகவினர்.
எச் ராஜா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனத்திற்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்மாவில் தர்ணாவில் ஈடுபட்டு வரும் குடியிருப்பு வாசிகள்.
தற்காலிகமாக பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள சாவடியில் H.ராஜா உள்ளிட்ட 12 பாஜகவினர் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.




